சென்னை திருவல்லிக்கேணியில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்டார் திரையரங்கு அருகே உள்ள வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
















