தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே தரமற்று கட்டப்பட்டு இருந்த ஊராட்சி அலுவலகத்தைப் பார்வையிட முயன்ற பாஜகவினரை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
சூரியனார் கோவில் பகுதியில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த இந்த கட்டிடத்தின் மேற்கூரை சில நாட்களிலேயே பெயர்ந்து விழுந்தது.
இது தொடர்பாக விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் உதவிப் பொறியாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், உதவி செயற்பொறியாளர் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஊராட்சி அலுவலகத்தைப் பார்வையிட முயன்ற பாஜகவினர் அப்பகுதி மக்களுடன் சென்றபோது திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.