ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் நாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இரு நாடுகளிலும் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீவிர தாக்குதல் நடத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.