மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Sep 3, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். பின்னர் அவர் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உட்பட ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

முன்னதாக பேசிய ராஜ்நாத் சிங், ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை எனவும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதே போல குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பல்வேறு வகையான யோகா ஆசனங்களைச் செய்து அசத்தினார். இந்த யோகா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதில்
உலகெங்கிலும் உள்ள தூதரகப் பணிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு யோகாவில் பங்கேற்றனர்.

இதே போல டெல்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். முன்னதாக பேசிய அவர், 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும், மக்கள் யோகாவைப் பற்றி அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என கூறினார். உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா எவ்வாறு உதவியுள்ளது என்பதையும் நாம் கண்டுள்ளோம் எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இதே போல உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் உடல்ரீதியாக ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே நமது விருப்பங்கள் நிறைவேறும் எனவும், அதற்கு யோகா மிகவும் அவசியம் எனவும் கூறினார்.

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் யோகா குரு பாபா ராம்தேவ்வும் பங்கேற்று மேடையில் அனைவர் முன்னிலையிலும் யோகாசனங்களைச் செய்தார்.

Tags: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முPresident Draupadi Murmu doing breathing exercisesமூச்சுப் பயிற்சி
Share
Tweet
SendShare
Previous Post

தெஹ்ரானில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு!

Next Post

சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies