சர்வதேச யோகா தினம் - கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!
Sep 21, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2026, 10:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச யோகா தினத்தையொட்டி கொல்கத்தாவில் 35 ஆயிரம் பேருடன் இணைந்து பிரதமர் மோடி யோகாசனம் செய்தார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெற்றது. மேற்குவங்க மாநிலத்தில் முதல்முறையாக யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 35 ஆயிரம் பேருடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினம் உலகின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்ட நாளாக மாறியுள்ளதாக தெரிவித்தார். யோகா நம் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருப்பதுடன், நமது ஆற்றலின் அளவை அதிகரிக்கிறது என கூறியுள்ளார்.

இமயமலை முதல் இந்திய பெருங்கடல் வரையிலும், மேற்குவங்கம் முதல் சவுராஷ்டிரா வரையிலும் நாடு முழுவதும் யோகாவின் ஆற்றல் நிறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். முழு நாடும், உலகமும் யோகா மூலம் ஒன்றோடொன்று இணைந்துள்ளது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, இதுவே யோகாவின் வலிமை என தெரிவித்துள்ளார். மேலும், யோகா பயிற்சியை நமது வருங்கால சந்ததியினரின் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் நீச்சல் குளத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்கள் செய்தனர்.

இதேபோன்று கொல்கத்தாவில், கங்கை நதியில், படகுகளில் கடற்படை வீரர்கள் யோகாசனம் செய்தனர். அப்போது பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்டவைகளை செய்து வீரர்கள் அசத்தினர்.

லடாக்கின் புகழ்பெற்ற பாங்கோங் சோ ஏரிக்கரையில், கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரத்து 91 அடி உயரத்தில் இந்தோ – திபெத் படை வீரர்கள் யோகாசனங்களை செய்தனர்.

Tags: PM Modiwest bengalKolkattaInternational Yoga Day
Share
Tweet
SendShare
Previous Post

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Next Post

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

Related News

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies