புகழ்பெற்ற தாஜ்மஹாலில் இலவச நுழைவுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள காதல் நினைவுச் சின்னம் என அழைக்கப்படும் தாஜ்மஹாலில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பார்வையாளர் இலவசமாகச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பலரும் தாஜ்மஹாலுக்கு வருகை தந்து சுற்றிப் பார்த்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.