ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்காவின் மினசோட்டா மாகாண உறுப்பினரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அதிபர் டிரம்பின் உத்தரவால் மத்திய கிழக்கில் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதாக மினசோட்டா மாகாண உறுப்பினர் இல்ஹான் உமர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராணுவ தாக்குதல்கள் அமைதியைக் கொண்டுவராது என்றும், அவை மேலும் வன்முறையைத் தூண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
ராணுவ தாக்குதல்கள் பிராந்தியத்தைச் சீர்குலைப்பதுடன், அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் இல்ஹான் உமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் முடிவில்லாத போரால் சோர்வடைந்துள்ளதாகத் தெரிவித்த மினசோட்டா மாகாண உறுப்பினர், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு, இந்த பைத்தியக்காரத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.