சேலத்தில் குற்றங்கள் குறைய, அழகாபுரம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் திருநங்கைகளைக் கொண்டு பூஜை செய்த வீடியோ வைரலான நிலையில் விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் கொலை, கொள்ளை அரங்கேறும் நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சேலம் மாநகரில் குற்றங்களைக் குறைய வேண்டி அழகாபுரம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் திருநங்கைகளை கொண்டு போலீசார் சிறப்புப் பூஜைகளை நடத்தியுள்ளனர்.
பூஜைகள் குறித்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.