பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர், அவற்றில் மூவரை உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர். 4 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன 3 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.