திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரானந்தபுரத்தில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், இந்துமுன்னணி முன்னாள் பிரமுகர் சுமன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தொடர்புடைய நரசிம்ம பிரவின் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய கோரி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என கொலை செய்யப்பட்ட பாலமுருகனின் மனைவி ஹேமலதா தெரிவித்துள்ளார்.
















