மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 120வது பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்குகீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மா.பொ.சி. என்ற மூன்றெழுத்து, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தெரியும் எனக் கூறினார். மூன்றெழுத்துகள் எல்லாம் தமிழகத்தில் பெயர்போனது எனக்கூறிய அவர், தமிழகத்தின் எல்லையை வரையறுத்தவர் மா.பொ.சி. எனப் புகழாரம் சூட்டினார்.
முந்தைய ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தபோது திமுக ஏன் கேள்வி எழுப்பவில்லை என வினவிய அவர், தற்போது மட்டும் கேள்வி எழுப்புவது நியாயமா என கேட்டார்.
மேலும், முருக பக்தர்கள் மாநாட்டில் ஆன்மிகத்தைப் பற்றிப் பேசியதாகவும், அடுத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.