ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்காடு அரசு மருத்துவமனை அருகே ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி காரிப்பட்டி பகுதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, அண்மையில் பெற்றோர்கள் போாராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், அடிப்படை வசதிகள் செய்து தரும்வரை பள்ளியை காரிப்பட்டிக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.