நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே விவசாயி ஒருவரை கரடி கடித்துக் குதறிய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரியாண்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், தனது வாழைத் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று, பாலகிருஷ்ணனின் முதுகுப் பகுதியில் சரமாரியாக கடித்துக் குதறியது.
இதனால் காயமடைந்த அவர், அங்கிருந்து தப்பியோடிய நிலையில், கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















