எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தங்களின் வரிசையில் உள்ள பெரும்பாலான மாடல்களுக்கு ஒன்றரைச் சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
அதன்படி வாகன விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை மாற்றங்களின் அளவானது மாடல் மற்றும் வேரியண்ட்-க்கு ஏற்ப வேறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதாரத்தைச் சரிசெய்தல் காரணமாக வாகனங்களின் விலைகளில் திருத்தம் செய்துள்ளதாக எம்ஜி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.