சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் நாளில், தனது உடல்நிலைப் பாதிக்கப்பட்டதாக சுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் முதன் முறையாகச் சுபன்ஷு சுக்லா பேசி உள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் நாளில் தூக்கம் தூக்கமாக வந்ததாகவும், அந்தளவுக்கு உடல் சோர்வாக இருந்ததாகவும் அவர்த் தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கான அனுபவம் என்று குறிப்பிட்ட அவர், விண்வெளி நிலையத்திற்குள் வரவும், விண்வெளியில் நடக்கவும் குழந்தை நடைப் பயில்வதுபோல் கற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.