ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் தரவுகளின் படி, 2023-24 நிதியாண்டில் 20 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. 2024-25 நிதியாண்டில் 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக ஜிஎஸ்டி வசூல் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதன்மூலம் கடந்த ஐந்தே ஆண்டுகளில் ஜிஎஸ்டி வசூல் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிதாரர்கள் எண்ணிக்கையும் கடந்த 2017-இல் 65 லட்சம் என்ற அளவிலிருந்து 1.51 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.