இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநாடு குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2029-ம் ஆண்டுக்குள் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஆட்சியில் கப்பல் போக்குவரத்துத்துறை புதிய மைல் கல்லை எட்டிவருவதாக பெருமிதம் தெரிவித்த அவர், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் துறைமுகங்களின் வசதிகளை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.