திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி வரும் 7ம் தேதி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, நெல்லையில் இருந்து காலை 9.15க்கு புறப்படும் சிறப்பு ரெயில், 10.50 மணிக்கு திருச்செந்தூரை அடையும் என்றும் மறு மார்க்கமாக காலை 11.20க்கு புறப்படும் ரயில் மதியம் 12.55க்கு நெல்லையை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.