தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க யாசகம் பெற்று நிதி வழங்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் தடையை மீறி ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், மழை காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. மூன்று மாதங்களைக் கடந்தும் தற்போது வரை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை.
பாரதி இல்லத்தை சீரமைக்க, பொதுமக்களிடம் யாசகம் பெற்று மாநில அரசிடம் வழங்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், எட்டயபுரத்தில் தடையை மீறி யாசகம் பெற முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.