சேலம் செவ்வாய்பேட்டையில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
அருணாச்சலம் தெருவைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரான தனபால் என்பவரிடம், திமுக முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம் என்பவர், கால்வாய் கட்ட பணம் தருமாறு வற்புறுத்தி உள்ளார்.
பணம் தர மறுத்த தனபாலை ராமலிங்கம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் திமுக முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.