திருவள்ளூரில் 75 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற நில எடுப்பு வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரியகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் நில எடுப்பு அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் எட்வர்ட் வில்சன், தனியார் தொழிற்சாலையின் நில இழப்பீடு தொகையை விடுவிக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இடைத்தரகர் மூலம் ரசாயனம் தடவிய 75 ஆயிரம் ரூபாயை எட்வர்ட் வில்சன் பெறும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 2 இடைத்தரகர்கள் உட்பட 3 பேரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.