நாமக்கல்லில் இன்று முதல் உணவு டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும், உணவகத்திற்கும் உள்ள கமிஷன் வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் அருண், விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் 50 சதவீதம் வரை வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.