நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்குக் குறைந்த ரத்த அழுத்தமே காரணமென போலீசார் தெரிவித்துள்ளனர்.
42 வயதான ஷெஃபாலி ஜரிவாலா கடந்த வெள்ளிக் கிழமை மரணமடைந்தார். இந்நிலையில் மரணத்திற்குக் குறைந்த ரத்த அழுத்தமே காரணமென போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு பெட்டி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் குளுதாதயோன் மற்றும் தோல் பளபளப்புக்கு உட்கொள்ளும் மாத்திரைகளே அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது.