வங்கதேசத்தில் இந்துப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமிலா மாவட்டத்தில் இந்துப் பெண் ஒருவர், உள்ளூர் அரசியல் பிரமுகரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
பின்னர், அந்தப் பெண் நிர்வாணக் கோலத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, அரசியல் பிரமுகரான ஃபாஸோர் அலி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.