அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகி பியான்ஸ் அந்தரத்தில் தவித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
ஹூஸ்டன் நகரில் பிரபல பாடகி பியான்ஸின் பாடல் கச்சேரி நடைபெற்றது. இதில் பியான்ஸ் அந்தரத்தில் தொங்கிய காரில் அமர்ந்தபடி பாடல் பாடிக் கொண்டிருந்தார்.
அப்போது தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் பியான்ஸ் அந்தரத்தில் சிக்கிக் கொண்டார். இதனால் ரசிகர்கள் பியான்ஸை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.
தொடர்ந்து தொழில் நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு பாடகி பியான்ஸ் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டார்.