ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை மீண்டும்தொடங்கமுடியும் எனச் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து பென்டகன் பாதுகாப்பு அமைப்புக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த கருத்து வேறுபாடு குறித்துப் பேசிய ரஃபேல் க்ரோசி ஈரான் நினைத்தால் சில மாதங்களில் அல்லது அதை விடக் குறைவான காலத்திலேயே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும் ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டதாகவும், அங்கு எதுவும் இல்லை என்றும் யாரும் கூற முடியாது என்றும் ரஃபேல் க்ரோசி கூறினார்.