திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு, அவரது கணவரும் மாமனாரும் பாலியல் தொல்லை அளித்ததாக, பெண்ணின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாகப் பெண்ணின் தந்தையிடமும் ஆர்.டி.ஓ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தனது மகளுக்கு அவரது கணவரும், மாமனாரும் பாலியல் தொல்லை அளித்து சித்ரவதை செய்ததாகக் குற்றம்சாட்டினார்.
பின்னர் பேசிய பெண்ணின் தாயார், தனது மகளின் இறப்புக்குக் காரணமான 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.