வைகை அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 ஆயிரத்து 371 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக 60 அடியை எட்டியது.
இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிக்கு ஆயிரத்து 500 கன அடியும், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக 900 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிக்குத் திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 479 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.