இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி 20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 97 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது.