ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் பெய்து வரும் கனமழையால் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மண்டி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், பல்வேறு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் பியாஸ் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையை மீறி தண்ணீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.