தேர்தல் வருவதால் சிவகங்கை அஜித்குமார் உயிரிழந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்யுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள பதிவில், திமுக அரசு தற்போது திருப்புவனம் காவல் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளதாகவும், இது வரவிருக்கும் தேர்தல்களுக்கு வசதியாக சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணையை வரவேற்பதாகவும், என்றாலும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் அதே அவசரமும் அர்ப்பணிப்பும் ஏன் இல்லை என்றும் என்றும் அவ்ர கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியதாகவும், தற்போது ஏன் இந்த மாற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும்போதுதான் “பாரபட்சமற்ற விசாரணை” என்ற எண்ணம் தோன்றுகிறதா என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.