காவல்துறை விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் எஸ்.பி.யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
யார் உத்தரவின்பேரில் வழக்கை சிறப்பு படை போலீசார் விசாரணை செய்தனர் என வினவிய நீதிபதிகள், இதுகுறித்து DGP பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
நகை திருட்டு தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அஜித்குமாரின் மரணத்திற்கு அரசே பொறுப்பு எனவும் காட்டமாக தெரிவித்தனர்.