தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவையொட்டி, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவாக கோயில் ராஜகோபுரம் கீழ் பகுதியில் அமைந்துள்ள யாகசாலை பந்தலில், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
முன்னதாக, கோயிலில் இருந்து கும்ப கலசங்கள் மேள தாளங்கள் முழங்க யாகசாலை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.