மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், திமுக எம்.பி தங்கதமிழ் செல்வனின் மகனை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி எம்.பி தங்கதமிழ் செல்வனின் மகனான நிஷாந்த் என்பவர், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு
தனது கர்ப்பிணி மனைவியுடன் சென்றுள்ளார்.
வாசலில் உள்ள கடையில் அர்ச்சனைக்கான பொருட்கள் வாங்கிய அவர், விலை கூடுதலாக உள்ளதாகவும், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவை தரமற்று இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கடை உரிமையாளர் நிஷாந்த் மீது தேங்காயை வீசியதாகவும், ப்ளாஸ்டிக் சேரால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில், நிஷாந்திற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கடை உரிமையாளரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.