தரமான கல்விதான் என்றும் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் என சுவாமி விக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை, டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் சுவாமி விக்ஞானந்தா எழுதிய “THE HINDU MANIFESTO” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. HINDUSTAN CHAMBER OF COMMERCE அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் அசோக் ரத்தன்சி தாக்கர், தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன், HINDUSTAN CHAMBER OF COMMERCE அமைப்பின் இயக்குநர் லினேஷ் சனத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய சுவாமி விக்ஞானந்தா, பொருளாதாரம் மட்டுமே ஒரு நாட்டின் பலம் எனவும், கலாச்சாரம் சிறந்ததாக இருந்தால் கூட பொருளாதாரம் இல்லாவிட்டால் எதிரி நாடுகள் நம்மை வீழ்த்தக்கூடும் என்றும் தெரிவித்தார்.