சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோயிலுக்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பதையொட்டி கடந்த 29-ம் தேதி கோயிலின் அர்ச்சனை பொருட்கள் விற்பனை கடை, பிரசாத விற்பனை கடை மற்றும் பார்க்கிங் இடம் ஆகியற்றுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில், திடீரென பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.