8 நாட்கள், 5 நாடுகள் - வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!
Aug 18, 2025, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக கானா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, நமீபியா, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் ஆப்ரிக்க நாடான கானாவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் முதல் முறையாக கானா செல்லும் பிரதமர் மோடி, கடந்த 30 ஆண்டுகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.

பின்னர் நாளை மாலை அங்கிருந்து டிரினிடாட் அண்டு டுபாகோவிற்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை மறுதினம் அங்குள்ள நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலும், ஜூலை 5 முதல் 8-ம் தேதி வரை பிரேசில் நாட்டிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரேசில் அதிபர் லுலா டா சில்வா அழைப்பை ஏற்று அங்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு, பன்முகத்தன்மையுடன் உறவை வலுப்படுத்துதல், பொறுப்பான ஏ.ஐ தொழில்நுட்ப பயன்பாடு, உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் இந்தியாவின் பார்வைகளை அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி பிரேசிலில் இருந்து தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவிற்கு செல்லும் பிரதமர் மோடி. 9-ம் தேதி அந்நாட்டு அதிபர் நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

Tags: Brazilprime minister modiNamibiaArgentinaGhanaTrinidadTobago8-day trip
ShareTweetSendShare
Previous Post

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

Next Post

பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை – கணவர், மாமியார் கைது!

Related News

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies