தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் கீழ் செயல்படும் சிறப்பு படைகளை கலைத்து உத்தரவிட்டுள்ள அவர், மாநகராட்சி பகுதிகளில் உள்ள இணை ஆணையர் துணையாணையர், உதவி ஆணையர்களின் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளையும் கலைத்து ஆணையிட்டுள்ளார்.
ஒரு குற்றசம்பவங்கள் நிகழும்போது வழக்கின் தன்மைக்கு ஏற்றார்போல தனிப்படைகளை அமைக்க வேண்டும் எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.