கொரோனா தடுப்பூசிக்கும் திடீரென ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஹாசன், சிக்மகளூரு, சிவமோகா மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் 27 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
இந்த மரணங்களுக்கு கொரோனோ தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவிட் தடுப்பூசிகளுக்குப் பிறகு நிகழ்ந்த திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் நடத்திய ஆய்வு முடிவினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிகவும் அரிதாக ஏற்படும் எனவும், திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறையும் பிற நோய்களுமே காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.