உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் முக்கிய சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.