தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செல்போன் விற்பனையகத்தின் சுவரில் துளையிட்டு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்குஷ் நகர் -கோட்டி சாலையில் செல்போன் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சுவரில் துளையிட்ட மர்ம நபர் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.