கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சரவணம்பட்டி பகுதியில் விஜயன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வரும் நிலையில், அவரிடம் உணவு பாதுகாப்பு அதிகாரியான சக்திவேல் என்பவர் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஜயன் புகார் மனு அளித்துள்ளார்.