கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் சரக்கு வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
கோழிக்கோட்டில் இருந்து பாலுசேரிக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. செல்லனூர் அருகே பயணித்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.