நெல்லை மாவட்டம், அகஸ்தியர்பட்டி அருகே முறையாகக் குடிநீர் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், வெகு தொலைவுக்குச் சென்று தண்ணீர் சுமந்து வர வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.