மத்தியபிரதேசத்தில் பரவலாகப் பெய்த மழையால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்தது.
அதன்படி, குவாலியர், பிந்து, மொரேனா, ஷியோபூர், தாஷா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.