சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே விவசாயி கொலை வழக்கில் உறவினர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவர் பிப்ரவரி 15ஆம் தேதி மாயமானர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், முனியனின் சகோதரியின் கணவர் வெங்கடேஷ் தனது கணவரைக் கொலை செய்ததாகக் கூறி முனியனின் மனைவி புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் சேகர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சொத்துக்காக முனியனை கொலை செய்து உடலை மயானத்தில் தீயிட்டு எரித்ததாக ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.