கேரளா மாநிலம் கொல்லம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லம்பலம் தேசிய நெடுஞ்சாலையில் ஷ்யாம் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.