சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கலையனூரைச் சேர்ந்த பாலா அமிர்தம் என்பவர் தேவிபட்டினம் சுகாதார நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
அண்மையில் இவரது வங்கிக் கணக்கிற்கு 20 லட்சம் ரூபாய் வந்துள்ளது. இந்த பணம் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடும் சட்டவிரோத கணக்கிலிருந்து வந்ததாகக் கூறி, பாலா அமிர்தத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர், தனது வங்கிக் கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும், தன்னை ஏமாற்றி பணப்பரிவர்த்தனை செய்ய வைத்த நம்பு சீனிவாசன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.