ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா மற்றும் சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த புதிய மசோதா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகக் குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைப் பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்கா இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.