மதுரையில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தீவிபத்து ஏற்பட்டது.
தனியார் பேருந்து சுமார் 50 பயணிகளுடன் வீரபாண்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், லாரி மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தைத் திருப்பிய போது நிலை தடுமாறி தனியார் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது.